உங்க உடம்புக்கேற்ற சரியான டயட்டை தேர்வு செய்வது எப்படி?.

15 Views
Published
அனைவரும் பார்க்க அழகாக தெரியவேண்டும் என நினைப்போம். ஆனால் உலகில் உள்ள பெரும்பாலானோர் அழகாக தெரிய ஒல்லியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். நமக்கு தொல்லையாக இருப்பது எப்படி இந்த 'கச்சிதமான உடலை' பெறுவது என்பது தான். கச்சிதமாக இருப்பது என்ற ஒற்றை வரையறை, கடந்த பல ஆண்டுகளாக உத்வேகம் பெற்று, தற்போது பல மில்லியன் டாலர் சந்தையாக உருவெடுத்து நிற்கிறது. ஒல்லியாக வேண்டும் என்ற ஆர்வம் உருவாகி அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தீடீரென டயட் எனப்படும் பத்தியத்தை துவங்கவும் நிறுத்தவும் செய்கின்றனர்.
Category
Health (Health)